கோவையில் ஜன்னல் அறுத்து நகைக் கடையில் திருட முயற்சி : அசாம் நபர் கைது !
கோவையில் நகை கடை கொள்ளை முயற்சி: குற்றவாளி அசாமில் மடக்கிப் பிடிக்கப்பட்டு சிறையில் அடைப்பு.;
கோவை பெரியகடை வீதியில் உள்ள நகைக் கடையில் பின்புற ஜன்னல் அறுத்து, ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகளை திருட முயற்சி செய்த சம்பவத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மீதும் நமதாஸ் கைது செய்யப்பட்டார். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறை, குற்றவாளியை அடையாளம் கண்டு, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் அசாமில் சென்று அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து கருவிகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு, கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்கள் பாதுகாப்பு கருவிகள், சி.சி.டி.வி, அலாரம் உள்ளிட்டவற்றை பொருத்தி எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.