வைகை ஆற்றில் மூழ்கி முதியவர் பலி.
மதுரை துவரிமான் பகுதியில் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
மதுரை அருகே துவரிமான் இந்திரா காலனியை சேர்ந்த சாலக்கருப்பன் ( 65) என்பவர் தேங்காய் உறிக்கும் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று (அக்.15) துவரிமான் இந்திரா காலனி சுடுகாடு அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி சாலக்கருப்பன் உயிரிழந்தார்.இதை அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.