பொம்மிடியில் வெற்றிலை விற்பனை ஜோர்
பொம்மிடி வார சந்தையில் 32 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனை;
பொம்மிடியில் நேற்று அக்.16 வியாழக்கிழமை வெற்றிலை விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட வெளி மாவட்டங்களிலும் விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.3000 - ரூ.17,000 வரை விற்பனையானது. நேற்று ஒட்டு மொத்தமாக 32 லட்சத்திற்கு விற்பனையாக வியாபாரிகள் தெரிவித்தனர்.