கோவை: மத்திய சிறைக்குள் கத்தியுடன் நுழைய முயன்றவர் கைது
உறவினரை பார்க்க சிறைக்கு கத்தியோடு வந்த நபரால் பரபரப்பு.;
கோவை மத்திய சிறைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைய முயன்ற மதுரை, வேலூர் பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்ற நபரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க வந்த அவர், சிலர் அவரை சித்திரவதை செய்கிறார்கள் என்று கூறி திடீரென சிறை வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. சோதனையில் அவரது பையில் கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அய்யனார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.