சங்கு ஊதி சாவு மணி அடித்து போராட்டம்.
பெரம்பலூரில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சங்கு ஊதி சாவு மணி அடித்து போராட்டம்.;
பெரம்பலூரில் நெடுஞ்சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சங்கு ஊதி சாவு மணி அடித்து போராட்டம். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோட்டத் தலைவர் ராஜ்குமார் தலைமையில், பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் மீதும், திருச்சி கண்காணிப்பு பொறியாளர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! சாலைப்பணியாளர்களுக்கு நிலை II சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் பெரம்பலூர் கோட்டப்பொறியாளர் கலைவாணி அரசாணையின் சாராம்சத்திற்கு மாறான விளக்கம் தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தும் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம், சாலைப்பணியாளர்களை மாற்றுச் சாலைகளுக்கு பணிக்கு அனுப்பும் பொழுது போக்குவரத்துச் செலவினத் தொகையை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதி, சாவுமணி அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.