திமுக மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா.
மதுரையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.;
மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகளுக்கான தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமையில், மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்றது. மதுரை தெற்கு திமுக மாவட்டத்திற்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிகளிலுள்ள மகளிர் அணி நிர்வாகிகளுக்கு, தீபாவளி பரிசுப் பொருட்களை மாவட்ட செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் வழங்கினர். இவ்விழாவில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி மேலிடப் பொறுப்பாளர் சிவகாசி வனராஜா, திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, திருமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, மதுரை தெற்கு திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பிரமிளா பீமன், மதுரை தெற்கு திமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.