கம்பைநல்லூரில் ஆடுகள் விற்பனை அமோகம்

கம்பைநல்லூர் வார சந்தையில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை;

Update: 2025-10-18 01:54 GMT
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறும் வழக்கம். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வார சந்தைக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு வெளி மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5000-ரூ.12,000 வரை என நேற்று ஒரே நாளில் 35 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News