சைக்கிளில் சென்ற முதியவர். நிலைதடுமாறி விழுந்து பலி
குமாரபாளையத்தில் சைக்கிளில் சென்ற முதியவர் நிலைதடுமாறி விழுந்து பலியானார்.;
குமாரபாளையம் தெற்கு காலனி பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியம், 78, தனியார் நிறுவன வாட்ச்மேன். இவர் நேற்று மாலை 03:30 மணியளவில், பள்ளிபாளையம் சாலையில் சைக்கிளில் வேலையாக சென்று கொண்டிருந்தார். அப்போது, ரத்த அழுத்தம் காரணமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இவரை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தனர். இவர் சிகிச்சை பலனின்றி, நேற்று, அதிகாலை 03:15 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.