நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
குமாரபாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.;
குமாரபாளையம் நகராட்சி பணியாளர்களுக்கு சீருடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்வு நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், கவுன்சிலர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பலரும் தீபாவளி பரிசு பெற்றனர். இதில் குமாரபாளையம் தொகுதி தி.மு.க. பார்வையாளர் செல்வம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வாழ்த்தினர்.