கோவையில் திடீர் மழைக்குப் பின் பட்டாசுப் புகை மூட்டம் !
திருச்சி சாலையில் அடர்ந்த புகை – போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி.;
தீபாவளியை முன்னிட்டு கோவை புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் மாலை நேரத்தில் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதற்கிடையில் திடீரென பெய்த மழை காரணமாக அரைமணி நேரம் பட்டாசு வெடிப்பு நேற்று தடைபட்டது. பின்னர் மழை நின்றதும், மக்கள் மீண்டும் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியதால், நகரம் முழுவதும் கடுமையான புகை மூட்டம் உருவானது. குறிப்பாக திருச்சி சாலையில் புகை அடர்த்தியாக காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் இன்று பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அதிகப் புகையால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத சூழல் ஏற்பட்டதால், வாகனப் போக்குவரத்து மெதுவாக இயங்கியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.