கோவை குற்றாலம் சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டது!
கனமழையால் கோவை குற்றாலம் சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடல்.;
கோவை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் (Orange Alert) அறிவித்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (22.10.2025 – புதன்கிழமை) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போளுவாம்பட்டி வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார். மழை நிலைமை சாதாரணமாக மாறிய பின் சுற்றுலா மீண்டும் திறக்கப்படும் என்றும், தற்போது அருவி அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.