ஊத்தங்கரை: புளியமர கிளை மின்கம்பிகள் மீது விழுந்து மின்சாரம் துண்டிப்பு.
ஊத்தங்கரை: புளியமர கிளை மின்கம்பிகள் மீது விழுந்து மின்சாரம் துண்டிப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜர் நகர் முனியப்பன் கோவில் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் அந்த பகுதியில் இருந்த புளிய மரம் கிளை முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது அப்பகுதி முழுவதும் இரவு மின்சாரம் இன்றி பொது மக்கள் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஊத்தங்கரை மின்சார துறையினர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் மரக் கிளைகளை அப்புறப்படுத்தி சீர் செய்யபடும் என்றனர்.