தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் பல மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் இடைவிடாமல் கன மழையும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.