பொறியியல் கல்லூரியில் பீட்ஸ் ஆன் ஃபீட்ஸ் கலாச்சார போட்டிகள்

தூத்துக்குடி வாகைகுளம் சென்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பீட்ஸ் ஆன் ஃபீட்ஸ் என்ற பள்ளிகளுக்கு இடையேயான கலாச்சார போட்டிகள் நடைபெற்றது.;

Update: 2025-10-25 07:11 GMT
தூத்துக்குடி வாகைகுளம் சென்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் பீட்ஸ் ஆன் ஃபீட்ஸ் என்ற பள்ளிகளுக்கு இடையேயான கலாச்சார போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜாஸ்பர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி தலைவர் விக்டர் மற்றும் ஸ்காட் கல்வி குழும இயக்குனர் ஜான் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பல்வேறு விதமான நடனப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள், பானையில் ஓவியம் வரைதல், கனசதுரக் கரைசல், கழிவுகளிலிருந்து கலை, ஓவியப் போட்டி, பேஷன் வாக், ஸ்கிட் போன்ற போட்டிகள் நடைபெற்றது. 1200 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி முதல் இடத்தை பிடித்தது. திருநெல்வேலி சைல்ட் ஜீசஸ் மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடத்தை பிடித்தது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துகிருஷ்ணன், ஜோ பேட்ரிக், மெக்லூரட் பாலின் விசு மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News