தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!
தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்!;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் மணியாச்சி ஆ.சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அமல்ராஜ் நவமணி அடுத்த ஆண்டு மே மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால் அவருக்கு ஆசிரியர் பயிற்சி புத்தகத்தை உண்மை தன்மை அறியும் பொருட்டு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஆனால்,உரிய நடவடிக்கை எடுக்காமல் புத்தகத்தை காணவில்லை என்று வட்டார கல்வி அலுவலகத்தில் கூறியுள்ளனர். காணாமல் போன உண்மைத்தன்மை புத்தகத்தை கண்டுபிடித்து இந்த புத்தகம் காணாமல் போனதற்கு அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகள் வருங்கால வைப்பு நிதி கணக்கிட்டுதாள் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க வட்டாரத் செயலாளர் கோபால் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கலைஉடையார், மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.