கடல் நீர் திடீரென பச்சை நிறமாக மாறியதால் மீனவர்கள் அச்ம்
தூத்துக்குடி அருகே கடல் நீர் திடீரென பச்சை நிறமாக மாறியதால், அப்பகுதி மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.;
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கடல் பகுதி மற்றும் பட்டின மருதூர் கடல் பகுதியில் கடல் நீல நிறத்தில் இருந்து மாறி அரக்கு நிறமாக கடல் நீர் காணப்படுவதால் மீனவர்கள் அச்சம் அரக்கு நிறத்திலான கடல் பஞ்சு போன்று கடற்கரைகளில் கடல் அலைகளால் அடித்து வரப்பட்டு ஒதுங்குவதால் பரபரப்பு கடல் நீர் நிறம் மாறியது குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை தூத்துக்குடி கடற் பகுதி மன்னார் வளைகுடா கடற் பகுதியாகும் இங்கு அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் அரிய வகை பவளப்பாறைகள் கடல் பஞ்சுகள் ஆகியவை அதிகம் காணப்படும் பகுதியாகும் மேலும் பாதுகாக்கப்பட்ட கடல்பகுதியாகும் இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராம கடற்பகுதி மற்றும் அருகே உள்ள பட்டினம் மருதூர் கடற்பகுதி வரை பல கிலோமீட்டர் தூரம் திடீரென கடல் நீல நிறத்தில் இருந்து அரக்கு நிறமாக,,(பிரவுன் கலரில்) கடல் நீர் நிறம் மாறி காணப்படுவதுடன் அரக்கு கலரிலான கடல் பஞ்சு போன்று சிறு சிறிய பஞ்சுக்கலாக கடற்கரை பகுதியில் ஒதுங்கி வருகிறது கடலில் ஏற்பட்ட இந்த நிறம் மாற்றம் காரணமாக தருவைகுளம் பட்டினமருதூர் பகுதி மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கும் நிலையில் அதில் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இவ்வாறு கடல் நீர் மாறி உள்ளதா அல்லது ரசாயன கழிவுகள் ஏதும் கடலில் கலக்கப்பட்டடு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகள் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து இந்த சிறிய பிரவுன் நிற பஞ்சு போன்ற பஞ்சுக்கள் கரை ஒதுங்குகிறதா என்பது குறித்து மீன்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது குறித்து கடல் மீன்வள ஆய்வாளர்கள் கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பட்டினமருதூர், சுரங்குடி, வேம்பார் ஆகிய பகுதிகள் முழுவதும் இவ்வாறு தான் அரக்கு நிறத்தில் உள்ளது. அதாவது, இங்கு பவளபாறை அதிகம் உள்ளதால் அங்கு காற்று அடிக்கும் பட்சத்தில் அது பாசியாக வெளியேறி அரக்கு நிறத்தில் உள்ளது. ஆகவே மீனவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.