புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த வனதிராயன்பட்டி கிளை சாலையில் அடையாளம் தெரியாத நபர் டிப்பர் லாரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து நேற்று அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை போலீசாரை கண்டவுடன் லாரியை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து போலீசார் டிப்பர் லாரியை 3 யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.