புதுக்கோட்டை, நத்தம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரம்மையா (30). அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் மணிகண்டன் முன்விரோதம் காரணமாக பிரம்மையா வீட்டில் இருந்தபோது வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அவரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உறவினர்கள் அனுமதித்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித் மற்றும் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.