புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுப்பட்டி பல்லவராயன் பத்தை ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட குண்டும் குழியுமான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.