புதுக்கோட்டை கனிமம் திருமண மண்டபத்தில் வார்டு தொண்டு நிறுவனம் சிறப்பு பள்ளி நடத்தும் இரண்டாம் ஆண்டு சர்வதேச பராமரிப்பாளர் தின விழா மற்றும் உலக மனநல நாள் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் ரகுபதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.