புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருவேப்பிலான் கேட் பகுதியில் மாடுகள் குறுகிட்டதால் காரைக்குடி சென்றுக் கொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயம் அடைந்த கார் ஓட்டுநர் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.