திருவரங்குளத்தில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த நபர் கைது
குற்றச் செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் கலையரங்கத்தில் செந்தில் முருகன் (34) என்பவர் நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி பிணையில் விடுவித்தனர்.