நெத்திமேட்டில் வடமாநில தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு

போலீசார் விசாரணை;

Update: 2025-10-30 11:53 GMT
பீகார் மாநிலம் நலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்த் குமார் ( 22). இவர் மணியனூரில் தங்கியிருந்து நெத்திமேட்டில் உள்ள இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் அருகே இவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போன் பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News