வருட கணக்கில் வேலைக்கு வராத தர்மபுரி சிறை சமையல்காரர் டிஸ்மிஸ்

சேலம் சிறை கண்காணிப்பாளர் நடவடிக்கை;

Update: 2025-10-30 12:14 GMT
தர்மபுரி மாவட்ட சிறையில் சமையலராக இருந்தவர் அமீர் செரீப் இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலைக்கு வரவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வுக்கு வந்த நீதிபதி சமையல்காரர் இல்லையா என கேள்வி கேட்டுள்ளார். இதையடுத்து ஊத்தங்கரை சிறையில் இருந்த சமையல்காரரை தர்மபுரிக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமீர் செரீப் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் அவரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து சரக சிறை கட்டுப்பாட்டு அதிகாரியும் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளருமான வினோத் உத்தரவிட்டுள்ளார்.

Similar News