உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கம்பம் அருகே அனுமந்தன்பட்டி பகுதியில் நேற்று (அக்.30) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சாக்கு பையுடன் நின்று இருந்த மகேந்திரன் என்பவரை சோதனை செய்த பொழுது அவர் சாக்கு பையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் காவல்துறையினர் மகேந்திரனை கைது செய்தனர்.