ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர் சிலை அருகே 2 தினங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (அக்.30) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வி.ஏ.ஓ அளித்த புகாரின் படி ஆண்டிபட்டி அருகே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.