நாமக்கல் அருகே கிராம ஏரியில் மண் அள்ளுவதை தடுக்க கோரி விவசாயி தேசிய கொடியுடன் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் ரங்கப்பன் நாயக்கன் பாளையம் கிராமத்தில் 80 ஏக்கரில் அமைந்துள்ளது விவசாய ஏரி இந்த ஏரியில் வண்டல் மண் அடிப்பகுதியில் செம்மண் நிறைந்து காணப்படுகிறது நேற்று சில சமூக விரோதிகள் இரவு டிப்பர் லாரி பொக்லைனுடன் வந்து;
மண் அள்ளுவதாக கூறி ஏரிக்குள் சென்றனர் இதை அறிந்த விவசாயிகள் பலர் அவர்களை தடுத்தி நிறுத்தும்போது அவர்கள் தப்பி ஓடி விட்டனர் இது தொடர்பாக இன்று அந்த பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் தேசிய கொடியுடன் அவருடைய நண்பர்கள் சுப்பிரமணி மணி முருகேசன் ஆகியோருடன் தேசியக் கொடியை ஏந்தி மனு கொடுக்க வந்தார் முன்னதாக இன்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் என்பதால் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விவரம் கேட்டறிந்தனர் அதற்கு ரங்கப்பநாயக்கன்பாளையம் ஏரியில் மணல் திருட்டு நடைபெற உள்ளது இதற்கு பலர் உறுதுணையாக உள்ளனர் ஆகையினால் இங்கு மணல் திருட்டை தடுக்க கோரி தேசிய உணர்வோடு தான் தேசிய கொடியை கையில் ஏந்தி மண் திருட வந்த லாரி ஜேசிபி இயந்திரங்கள் அடங்கிய புகைப்படத்துடன் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்தார் இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது