வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-11-08 12:44 GMT
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், இராசிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து, அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950 ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிற பொருத்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர். ஒவ்வாரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு 10 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 165 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. BLO, BLO Supervisor & BLA-களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 04.11.2025 முதல் டிசம்பர் 04, 2025 வரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகம் மற்றும் கணக்கடுப்பு பணிகள் நடைபெறுகிறது. அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியர் நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், இராசிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யும் பணியின் முன்னேற்றம் குறித்து, அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News