சீர்காழி அருகே அகனி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் சம்பா நெற் பயிர்களை நாசம் செய்த காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
சீர்காழி அருகே அகனி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் சம்பா நெற் பயிர்களை நாசம் செய்த காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை;
சீர்காழி அருகே அகனி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் சம்பா நெற் பயிர்களை நாசம் செய்த காட்டு பன்றிகளை சுட்டு பிடிக்க தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகனி கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர், முப்போகம் விளைந்த நெற்பயிர் சாகுபடி தற்பொழுது ஒருபோகத்திற்கு வழி இல்லாமல் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் விவசாயத்தை விட முடியாமல் கடன்களை பெற்று விவசாயத்தை செய்து வருகின்றனர்,தற்போது ஏற்படும் இயற்கை இடர்பாடுகளான மழை, புயல் போன்றவற்றிலிருந்து அழிவை சந்தித்து வரும் விவசாயிகள் தொடர்ந்து வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள விவசாயம் செய்து வருவதாக தெரிவிக்கின்றனர், இந்த நிலையில் இந்த பகுதியில் காட்டுப் பன்னிகள் வயல்களில் புகுந்து இரவு நேரங்களில் சம்பா நெற்பயிர்களை முற்றிலும் நாசம் செய்து அழைத்து வருகின்றனர், இதனால் சிறு -குறு விவசாயிகள் பெரும் பாதிப்படைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்,இதுகுறித்து காட்டுப்பன்னிகளை பிடிக்க மாவட்ட ஆட்சியருக்கும், வனத்துறைக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்,உடனடியாக தமிழக அரசு விவசாயத்தை பிரதான தொழிலாக வைத்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உடனடியாக காட்டுப் பன்னிகளை சுட்டு பிடிக்க உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்