திருக்குறள் திருப்பணிகள் திட்டம் இராசிபுரம் தமிழ்க் கழகம் 17 வது வாரம்திருக்குறள் பயிற்சி வகுப்பு.

பாரதிதாசன்நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கு. பாரதி வரவேற்புரையாற்றினர்.;

Update: 2025-12-14 14:06 GMT
இராசிபுரம் தமிழ்க் கழகத்தின் செயலாளர் பள்ளித் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி தலைமை தாங்கினார். அவர்தம் உரையில் மாந்தனை மாந்தன் ஆக்குவது திருக்குறள். மாந்தனைச் சான்றோன் ஆக்குவது திருக்குறள்.மாந்தனை தெய்வமாக்குவது திருக்குறள்.மாந்தனை இறைவன் ஆக்குவது திருக்குறள்.மாந்தனை பெயராக் கடவுள் பெருநிலையில் ஒன்றச் செய்வதும் திருக்குறள் .ஆம் அப்படிப்பட்ட திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வழியில் வாழ்வோம் தி.பி1966 சுரவம் தைத்திங்கள் ஐந்தாம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை பூண்டருளிய மறைமலை அடிகள் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும் என்று அறிவித்து திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் ஆண்டை கிறிஸ்தவ ஆண்டுடன் 31 ஆண்டு கூட்டி கணக்கிட வேண்டும் என்பது அடிகள் குறிப்பு . அதனை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறிஞர்களால் அவ்வாண்டு நடைமுறைக்கு வந்தது . 1969 -இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு ஆட்சி பொறுப்பை ஏற்றபின் பொங்கலுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாளாக கொண்டு அரசு விடுமுறை அளிப்பது என்றும் ஒன்னு ஒன்னு 1970 முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் ஆணையிட்டார். மேலும் சும்மா செல்லும் பேருந்து சுமந்து செல்லட்டும் ஒரு திருக்குறளை என பேருந்துகளில் திருக்குறளில் எழுதி வைத்தவர் டாக்டர் கலைஞர்.டாக்டர் கலைஞர் கன்னியாகுமரியில் 133 அடிகள் உயரத்தில் வள்ளுவருக்கு சிலை அமைத்து வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு பெருமை சேர்த்தார். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைத்து சிறப்பு செய்தார். வெண்பா வகையில் ஒன்று திருக்குறள் வெண்பா . அது குறள் வெண்பா என்றுதொல்காப்பியத்தில் குறிக்கப்படும் அப்பாவகையைக் கொண்டு எழுந்த முதல்நூல் குறள் என வழங்கப்பட்டது. அதன் சிறப்பு கருதி பின்னே திருக்குறள் என வழங்கப்பட்டது.என்று உரையாற்றினார். இன்றைய நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் திருவாளர் செல்வம் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தார்.50 அதிகாரங்களின் திருக்குறளை மனனம் செய்த இரண்டு மாணவிகளுக்கு பரிசினை வழங்கி பெருமை செய்தார். மேலும் அவரின் உரையில் இராசிபுரத்தில் தமிழ்க் கழகம் வழியாக நடத்தப்படுகிற திருக்குறள் திருப்பணிகள் திட்டமானது உலக அளவில் பெயர் பெற்றிடவேண்டும் என்ற நோக்கத்தோடு கின்னஸ் சாதனையில் இடம்பெறத்தக்க வகையில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் அதற்கு ஏற்பாடு செய்கிறேன் என உறுதி அளித்தார். திருக்குறள் சார்ந்து இந்த பயிற்சி மையத்தில் திருக்குறள் கற்றுக் கொள்ளக்கூடிய குழந்தைகள் தங்களுடைய திறனுக்கு ஏற்றவாறு திருக்குறளை ஆய்வு செய்து நூலாக எழுதினால் அதனை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதி செய்தார்.இராசிபுரம் தமிழ்க் கழகத்தின் தலைவர் திரு தமிழ்த்திரு பி .தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். 17 ஆம் வாரம் -பயிற்சி வகுப்பில் அதிகாரம் 49.காலமறிதல் 51.தெரிந்து தெளிதல் ஆகிய இரண்டு அதிகாரங்களும் இந்த வாரம் கற்பிக்கப்பட்டது கருத்தாளர்கள் முனைவர் பி தட்சிணாமூர்த்தி , வாகை மனோஜ் குமார் குழந்தைகளுக்கு ஆடல் பாடல்கள் மூலமும், கதை சொல்லியும் ,தாள்தளம் கரும்பலகையில் எழுதச் செய்தும் பயிற்சி அளித்து கற்பித்தனர். இராசிபுரம் தமிழ்க் கழகத்தின் பொருளாளர் வீ.ரீகன் நன்றி கூறினார்.

Similar News