தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்

தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த டாப் நிகழ்வுகள்;

Update: 2025-12-14 18:14 GMT
டிசம்பர் 14, தென்காசி மாவட்ட செய்தி துளிகள் :- 1. குற்றால அருவிகளில் குளித்து மகிழ்ந்த ஐயப்ப பக்தர்கள்... 2. சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக திருவிழா நடைபெற்றது. 3. திருவேங்கடம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கால்வாய் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 4. திருமலை கோயில் மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை ஆங்காங்கே வீசி செல்வதால் சுகாதாரமக்கேடாக காட்சியளிப்பதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் 5. பாவூர்சத்திரம் பகுதியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. 6. ஆலங்குளம் திமுக சார்பில் இன்று மாபெரும் வினாடி வினா எழுத்துப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 7. தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிந்து வழிபாடு மேற்கொண்டனர். 8. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள பிரானூர் பார்டரில் நூலகம் பழுதடைந்து காணப்பட்ட நிலையில் புதிய நூலகம் அமைக்கப்பட்டும் இன்னும் திறக்கப்படாததால் நூலக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 9. கீழப்புலியூர் ரயில்வே பகுதியில் பராமரிப்பு பணிகள் டிசம்பர் 16 நடைபெற உள்ளதால் பொதுமக்கள் மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளவும். 10. சுரண்டை பகுதியில் பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 11. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில் வாசுதேவநல்லூர் கடையநல்லூர் தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை தலைமை கழகத்தில் விருப்பமானவை பெற்று பூர்த்தி செய்து அளிக்குமாறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 12. தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை இன்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி திறந்து வைத்தார். 13. பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் சிலை அருகில் youtuber முத்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Similar News