திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வார விடுமுறை மற்றும் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்ததால் பழனி மலைக் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களாக காட்சியளித்தனர். ரோப் கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களில் பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசனத்துக்காக 2 மணி நேரம் காத்திருந்தனர்.