ஆகாரம் காமராஜ் நகரில் சிமெண்ட் சாலையை விரைந்து முடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை.

ஆரணி அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமெண்ட் சாலையை விரைந்து முடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.;

Update: 2025-11-11 14:25 GMT
ஆரணி அடுத்த ஆகாரம் காமராஜ் நகரில் சிமெண்ட் சாலையை விரைந்து முடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் மேற்குஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர். ஆரணி அடுத்த ஆகாரம் காமராஜர் நகரில் தேசிய ஊரக வளர்ச்சித்துறை திட்டத்தின்கீழ் ரூ.8.5லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஆட்சேபனை தெரிவித்ததால் சிமெண்ட் சாலை போடும் பணியினை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்று சிமெண்ட் சாலை போடும் பணியினை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள ஏரிக்கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் தரப்பில் சிமெண்ட் சாலையை விரைந்து முடிக்க உறுதியளித்தனர்.

Similar News