ஜனவரி நாலாம் தேதி ஈரோட்டில் தமிழ் புலிகள் கட்சியின் வெல்வோம் தமிழ்நாடு மாநாடு பெருந்திரளாக கலந்து கொள்ள கட்சியினருக்கு நாகை திருவள்ளுவன் அழைப்பு

வரும்ஜனவரி நாலாம் தேதி ஈரோட்டில் நடக்க உள்ள தமிழ் புலிகள் கட்சியின் மாநாடு குறித்தஆலோசனைக்கூட்டம். மாநாட்டில் பெரும் திரளாக கலந்து கொண்டு நம் வலிமையை காட்டும் வகையில் சிறப்பிக்க வேண்டும் அமைப்பு ரீதியாக கட்சியைபலப்படுத்த வேண்டியது நமது கடமைஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டநாகை திருவள்ளுவன் பேச்சு;

Update: 2025-11-13 14:24 GMT
வரும் ஜனவரி நாலாம் தேதி ஈரோட்டில் நடக்கவுள்ள தமிழ் புலிகள் கட்சியின்வெள்ளம் தமிழ்நாடு மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மலையடிவாரம்கொங்கு எழுகரை நாடு அருந்ததியர் மண்டபத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பரமத்தி வேலூர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள்கலந்து கொண்டனர். கூட்டத்திற்குதமிழ் புலிகள் கட்சியின் தலைவர்  நாகை. திருவள்ளுவன் தலைமை வகித்தார்  பொதுச் செயலாளர்  இளவேனில்  துணை பொதுச் செயலாளர்  செல்வகுமார்  மண்டல துணைச் செயலாளர்  சிவசங்கர்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்சுரேஷ் திருச்செங்கோடு தொகுதி மாவட்ட செயலாளர், அழகேசன் குமாரபாளையம் தொகுதி மாவட்ட செயலாளர், மாதேஷ்வரன் பரமத்தி தொகுதி மாவட்ட செயலாளர், வட்டூர். மாதேஸ்வரன் மாவட்ட துணைச் செயலாளர், ரவிச்சந்திரன் மாவட்ட துணைச் செயலாளர், ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன்,ஒன்றிய செய்தி தொடர்பாளர்மணிகண்டன்,நகர செயலாளர்சரவணன் ஆகியோர் உள்ளிட்ட 25 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கூறியதாவதுதமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் அருந்ததிய இன மக்களான நாம் நமது வலிமையை ஒன்று திரட்டி காட்ட வேண்டிய சூழ்நிலையில் ஈரோட்டில் வரும் நாலாம் தேதி வெல்லும் தமிழ்நாடு மாநாடு நடத்த உள்ளோம் இதுவரையில் தமிழ்நாட்டில் யாரும் இது போல் மாநாடை நடத்தியதில்லை என்று கூறும் அளவுக்கு எழுச்சியுடன் இந்த மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில் நம் மீது ஆளுகிற ஆள துடிக்கிற கட்சிகளில் கவனம் திரும்ப வேண்டும் நமது பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும் இது மாநாட்டின் நோக்கமாக இருந்தாலும் நமது நிரந்தர நோக்கம் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்துவதில் இருக்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து பொறுப்புகளுக்கும் நமது அருந்ததிய இன மக்களை இணைத்து கட்சியை பலப்படுத்து வதோடு நமது இன ஒற்றுமையை உறுதி செய்ய வேண்டும். என கூறினார்.

Similar News