எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மன்றங்கள் துவக்க விழா.
ஆரணி ஏ.சி.எஸ் நகரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக புறவளாகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மன்றங்கள் துவக்க விழா நடைபெற்றது.;
ஆரணி ஏ.சி.எஸ் நகரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் நிகர் நிலை பல்கலைக்கழக புறவளாகத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மன்றங்கள் துவக்க விழா நடைபெற்றது. இம்மருத்துவ முகாமில் எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை, உடல் கொழுப்பு பகுப்பாய்வு பரிசோதனை, கண் பரிசோதனை, பிசியோதெரபி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் மன்றங்கள் துவக்க விழா, கம்ப்யூட்டர் சென்டர் சோசியல் மீடியா, மேக்சிங் கான்ஃபரன்ஸ் போஸ்டர் வெளியீடு மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஏசிஎஸ் குழுமங்களில் தலைவர் ஏ.சி.எஸ் அருண்குமார் தலைமை தாங்கி மருத்துவ முகாம் மற்றும் மன்றங்களை துவக்கி வைத்தார். மேலும் இக்கல்வி குழுமங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றுகளையும் வழங்கி வாழ்த்தி பேசினார். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் லலிதா லட்சுமி சண்முகம், நிர்வாகி நிர்மலா அருண்குமார் , செயலாளர் ஏ.சி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்ஜிஆர் பல்கலைக்கழக டீன் பி.ஸ்டாலின் அனைவரையும் வரவேற்றார். இணை பதிவாளர்கள் பெருவழுதி, சரவணன், முதல்வர் எஸ். சுதாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஏ.சி.எஸ். கல்வி குழுமங்களின் தனி அலுவலர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர்கள் வி.திருநாவுக்கரசு, டி.கந்தசாமி, பிரபு, டி.இளங்கோ, ராஜலட்சுமி , சுஜாதா, துணை முதல்வர்கள் புனிதா, பாலசுந்தரம், நந்தகுமார், ஆர்.வெங்கடரத்தினம் , ஜெகன், மேலாண்மை இயக்குனர்கள் விக்னேஷ் , அருளாளன் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.