மூதாட்டியிடம் தங்க நகை பறித்த பெண் கைது
மூதாட்டியிடம் தங்க சரடு பறித்த இரண்டு பெண்களின் ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.;
ஆரணி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள்( வயது 60) இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆரணி மண்டி வீதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு மூட்டு வலிக்காக மாதந்தோறும் மருந்து வாங்கி சாப்பிட்டு வந்தார் . அதற்காக அண்மையில் வந்திருந்த போது அவ்வழியாக இருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கீழே மணிபர்ஸ் கிடப்பதாக கூறி போக்கு காட்டிவிட்டு அந்த மணிபர்சை எடுக்கும் போது அதில் ஏதோ பணம் இருப்பதாக கூறி எடுத்துள்ளார். பிரிப்பதற்குள் வேறு ஒரு பெண் வந்து இந்த மணிபார்சு என்னுடையது நீ எப்படி எடுத்தாய் என்று கூறி தகராறு செய்து அப்போது பச்சையம்மாள் கழுத்தில் இருந்த தங்க தாலி சாரடை அறுத்து தப்பி ஓடினர். இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசில் பச்சையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், எஸ்.ஐக்கள் ஆனந்த், ஜெயச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமாரக்களை தொடர்ந்து ஆராய்ந்தனர். ஆரணி டிஎஸ்பி சுரேஷ் சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் , எஸ்.ஐ ஜெயச்சந்திரன், சிறப்பு எஸ்.ஐ கன்ராயன், தனிப்பிரிவு போலீசார் வாகித், பட்டுச்சாமி , அருணகிரி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர் . தொடர்ந்து விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டமடுவு தீர்த்தகிரி கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா கிட்டப்பா (45 )மற்றும் இவருடன் வந்தவர் அஞ்சலா என்பதும் உறுதி செய்யப்பட்டது . நேத்ரா கிட்டப்பாவிடமிருந்து இரண்டரை சவரன் தங்க தாலி சரடு பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . தலைமறைவாக உள்ள அஞ்சலாவை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நேத்ரா கிட்டப்பா ஏற்கனவே கர்நாடக மாநில பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது