கரூரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் தங்களை பங்கெடுத்து கொண்டவர்கள் தான் அரசு ஊழியர்கள்.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.
கரூரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் தங்களை பங்கெடுத்து கொண்டவர்கள் தான் அரசு ஊழியர்கள்.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.;
கரூரில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட துயரங்களில் தங்களை பங்கெடுத்து கொண்டவர்கள் தான் அரசு ஊழியர்கள்.மாவட்ட ஆட்சியர் தங்கவேல் விளக்கம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரம்ம தீர்த்தம் சாலையில் அரசு ஊழியர் சங்க கட்டிடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு இன்றுசங்கத்தின் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,கொரோனா காலத்திலும் சரி அண்மையில் நடைபெற்ற அரசியல் கட்சி பிரச்சாரத்தின் போது 41 பேர் உயிரிழந்தும் 100 பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தில் அரசு ஊழியர்கள் நேரம் காலம் பார்க்காமல் மக்களுடைய சிரமங்களில் அவர்களது துயரை தீர்க்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றினர். இந்த சம்பவத்தில் நானும் பங்கேற்று முதல் நாள் இரவு துவங்கி மறுநாள் மாலை வரை அங்கிருந்து பணிகளை முடுக்கிவிட்டு பொதுமக்களின் துயரில் பங்கு எடுத்துக் கொண்டோம்.இது போன்ற நேரங்களில் ஒற்றுமையுணர்வோடு செயல்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரையும் பாராட்டுவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் இந்த அரசு ஊழியர் சங்க கட்டிடத்திற்கு கடந்த 1955 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக இடத்தை வழங்கியவர் தான் அப்போதைய முன்னணி தமிழ் திரைப்பட நடிகர் என் எஸ் கிருஷ்ணன் என எண்ணும்போது இது கரூர் மாவட்டத்திற்கும் அரசு ஊழியர்களுக்கும் கிடைத்த கொடை என தெரிவித்தார். இத்தகைய அரசு ஊழியர்கள் பொது காரியங்களில் ஊழியம் செய்யும்போது பல்வேறு விமர்சனங்கள் எழுவது வழக்கம்தான். எனினும் அதனை நாம் கடந்து செல்ல வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.