திருச்செங்கோட்டில் விட்டு விட்டு பெய்து வரும் மழை

திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளான குமாரமங்கலம், எலச்சிபாளையம் பட்டறை மேடு கொல்லப்பட்டி கூட்டப்பள்ளி, தோக்கவாடி மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு சாரல் மழையாகவும் மற்றும் மிதமாகவும் திடீர் என கன மழையாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது;

Update: 2025-11-23 10:46 GMT
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல்   சாரல் மழை தூறலாகவும் மிதமான மழையாகவும் அவ்வப்போது விட்டு விட்டு கன மழையாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பட்டறை மேடு கொல்லப்பட்டி கூட்டப்பள்ளி, தோக்கவாடி, குமாரமங்கலம், எலச்சிபாளையம் மாணிக்கம் பாளையம், உள்ளிட்ட பகுதிகளிலும் இதே போல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழலும் தொடர் மேக மூட்டமும் காணப்படுவதால் பகலிலேயே வீட்டுக்குள் மின்விளக்குகளை எரியவிடும் அளவு இருட்டாக உள்ளது.

Similar News