திருச்செங்கோடு நகராட்சியில் எஸ் ஐ ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி வருவாய் கோட்டாட்சியர் லெனின் ஆய்வு
திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளில் உள்ள 87வாக்குச் சாவடிகளை சேர்ந்த வாக்காளர்கள் இடம் இருந்து பெறப்பட்ட எஸ் ஐ ஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நகராட்சி வளாகத்தில் மேற்கொண்டனர் இந்த பணிகளை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் நேரில் ஆய்வுசெய்தார்;
தமிழகம்முழுவதும் சிறப்பு வாக்காளர் சீர்திருத்தப் பணி (எஸ் ஐ ஆர் )நடைபெற்று வருகிறது இதற்கான வாக்காளர்களிடம் வழங்கப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி 33 வார்டுகளிலும் உள்ள 87 வாக்கு சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிநகராட்சி அலுவலகத்தில் உள்ள நகர மன்ற கூட்ட அரங்கில் என்று நடைபெற்றது சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டனர் இந்தப் பணிகளை திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் நேரில் ஆய்வு செய்தார்.இதுவரை சுமார் 40% மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உள்ளதாகவும் பதிவேற்றம் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.