மணப்பாறையில் புளியமரம் திடீரென விழுந்ததில் உயிர் தப்பிய நகராட்சி ஊழியர். சிசிடிவி காட்சி வெளியானது.
மணப்பாறையில் புளியமரம் திடீரென விழுந்ததில் உயிர் தப்பிய நகராட்சி ஊழியர். சிசிடிவி காட்சி வெளியானது.;
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சி நுழைவு வாயில் முன்பு சாலையோரம் ஒரு புளிய மரத்தின் ஒரு பகுதியில் இருந்த கிளைகள் காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக இன்று காலை கிளைகள் உடைந்து விழத்தொடங்கின. கிளைகள் விழும்போது நகராட்சி அலுவலகத்தின் உள்ளே இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற நகராட்சி ஊழியர் ஒருவர் மீது திடீரென கிளைகள் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக நகராட்சி ஊழியர் உயிர் தப்பினார். மரக்கிளைகள் விழும் காட்சிகள் அங்கு கடையில் இருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதேபோல் மணப்பாறையில் இருந்து புத்தாநத்தம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரங்கள் பெரும்பாலானவற்றில் கிளைகள் வளைந்தும், காய்ந்ததும் விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படுவதற்குள் மோசமான நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.