திருச்செங்கோட்டில்பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்திதுவக்கி வைத்தார்.
திருச்செங்கோட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்திதுவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், எம்பிமாதேஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்;
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சர்வதேச தினத்தை ஒட்டி நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் ஆகியவை நடைபெற்றது புதிய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகில் இருந்து தொடங்கிய பேரணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி குடியரசு துவக்கி வைத்தார் முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.உறுதி மொழியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வாசித்தார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகசெயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் மூர்த்தி நாமக்கல் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாதேஸ்வரன்மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ் பாபு,திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி,நாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில், தீரன் தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் குரு இளங்கோ, திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர்கள் வடக்கு ஒன்றியம் வட்டூர் தங்கவேல் தெற்கு ஒன்றியம் தாமரைச்செல்வன், மத்திய ஒன்றியம் அருண், திருச்செங்கோடு நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி உலகநாதன் செல்வி ராஜவேல், சினேகா ஹரிகரன்,திவ்யா வெங்கடேஸ்வரன்,ரமேஷ்,கலையரசி,ராஜா அண்ணாமலை, ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.புதிய பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பலகையில் பெண்களுக்கு எதிரான வன்முறை தினத்தை ஒட்டிநடந்த கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் கையெழுத்திட்டனர்நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணிசென்றது பேரணியில் சென்றவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய தட்டியை ஏந்திய படியும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய படியும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை வலியுறுத்திய கோஷங்களை எழுப்பியபடியும் சென்றனர்.