திருச்செங்கோடு நகராட்சியில் மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட பாரத் என்பவர் இன்று பதவி ஏற்று கொண்டார் 

தமிழ்நாடு அரசால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் வேண்டும் என வலியுறுத்தி ஒருவரை நியமன உறுப்பினராக நியமிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து திருச்செங்கோடு நகராட்சியில் மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட பாரத் என்பவர் இன்று பதவி ஏற்று கொண்டார்;

Update: 2025-11-25 13:06 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு  உள்ளாட்சிஅமைப்புகளில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காக நியமன உறுப்பினராக ஒரு மாற்றுத்திறனாளியை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை தொடர்ந்து பல்வேறு நகராட்சிகளிலும் நியமன உறுப்பினர் நியமிக்கும் பணி நடந்து வருகிறது அதன்படி திருச்செங்கோடு நகராட்சியில் நாலாவது வார்டு பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான மாற்றுத் திறனாளி பாரத் என்பவர் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார் பாரத் என்று முறைப்படி நகர்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் பதவி ஏற்று கொண்ட பாரத்தை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாரத் கூறியதாவதுஉடல் ஊனமுற்றவர்கள் என அழைக்கப்பட்டு வந்த எங்களை மாற்றுத்திறனாளி என அழைக்க வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தற்போது சமூகத்தில் எங்களுக்கும் எந்தவித சிரமமும் இன்றி உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக முத்தான திட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரதிநிதித்துவம் வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்ட பாரத் திருச்செங்கோடு நகராட்சி நாலாவது வார்டு பகுதியில் உள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்எம்பிஏ பட்டதாரியான இவர் தனியார் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் கணக்காளராகபணியாற்றி வருகிறார் திருமணமான இவருக்கு கோகிலா என்ற மனைவியும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஜெர்சிகா என்ற மகளும் ஹன்சிகா என்ற நாலு வயது மகளும் என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Similar News