தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் குறித்து ஆலோசனை;

Update: 2025-11-25 13:57 GMT
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகம் தளபதி அரங்கத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக இளைஞர் அணி மாவட்ட ஒன்றிய, நகர,பேரூர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி வடக்கு மண்டல பொறுப்பாளர், மாண்புமிகு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதல்படி தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி MP , அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் MGS.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் கே.ஆர்.சி செல்வராஜ், பெ.ராஜகோபால், N.S.கலைச்செல்வன், R.P.முத்தமிழன், G.அசோக்குமார், தீ.கோடீஸ்வரன், தங்கச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் மாண்புமிகு துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் நவம்பர் 27 ல் ஏழை, எளிய மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது என தீர்மாணிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Similar News