திருச்செங்கோட்டில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து  ஒன்றியஅரசின் விவசாய விரோதப் போக்கை கண்டித்து திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்பாட்டத்தில் 20 பெண்கள் உள்பட 150 பேர் கலந்துகொண்டுகோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்;

Update: 2025-11-26 10:32 GMT
ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய விலை பொருட்கள் குறைந்தபட்ச  ஆதாரவிலை உற்பத்தி விலை மற்றும் 50 சதவீத கூடுதல் விலையோடு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், நெல் குறைந்தபட்ச ஆதார விலை 3500 குவின்டாலுக்கு வழங்க வேண்டும், கரும்பு டன் ஒன்றிற்கு ஐயாயிரம் வழங்க வேண்டும், பருத்தி குவிண்டாலுக்கு 10 ஆயிரத்து 121 வழங்க வேண்டும்,  மின்சார மசோதா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகள் அனைவருக்கும் வட்டி இல்லா  கடன் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் கூலியை 700 ஆக உயர்த்த வேண்டும், வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும், குடும்ப அட்டை வைத்துள்ளவர்களுக்கு பத்தாயிரம் மாதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டங்களாக சுருக்கி உள்ளதை நீக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வராஜ், அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கத்தின் தேசிய செயலாளர் லெனின், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அன்புமணி,சி ஐ டி யு மாவட்ட செயலாளர் வேலுசாமிஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன் சி ஐ டி யு மாவட்ட தலைவர் அசோகன் ஏ ஐ டி யூசி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் சி ஐ டி யு மாவட்ட துணை தலைவர் செங்கோடன் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன்ஏ ஐ கே எஸ் மாவட்டத் துணைத் தலைவர் பூபதி, கரும்பு விவசாயிகள் சங்கமாநில துணைத் தலைவர் நல்லா கவுண்டர் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், சி ஐ டி யு, ஐ என் டி யு சி, எஸ் எம் எஸ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களும் விவசாய அமைப்புகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 25 பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

Similar News