கரூரில் தனியார் ஆதரவற்றோர் அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடைபெற்றது.

கரூரில் தனியார் ஆதரவற்றோர் அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடைபெற்றது.;

Update: 2025-11-26 11:05 GMT
கரூரில் தனியார் ஆதரவற்றோர் அறக்கட்டளையின் முப்பெரும் விழா நடைபெற்றது. கரூர் சாய் ஆதரவற்றோர் நல அறக்கட்டளையின் திறப்பு விழா நிகழ்வு கரூர் அடுத்த சுங்க கேட் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாய் அறக்கட்டளையின் தலைவர் ராஜா தலைமை உரை ஆற்றினார். அறக்கட்டளையின் பொருளாளர் ராதாகிருஷ்ணன் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். கரூர் அடுத்த வெள்ளியணை பகுதியில் செயல்படும் அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரும் ஆடிட்டருமான வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சதீஷ், கரூர் மாவட்ட ரெட்டி நல சங்க தலைவர் பாலன், மற்றும் சாய் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் . இதனை தொடர்ந்து நாள்தோறும் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் துவங்கிய நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முடிவில் உறுப்பினர் சிவசங்கரி நன்றி கூறினார்.

Similar News