உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திருச்செங்கோடு நகர திமுக சார்பில் கொண்டாட்டம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாளை ஒட்டி திருச்செங்கோடு நகர திமுக சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு பால், ரொட்டி, இளைஞரணி சார்பில் பயணிகளுக்கு இனிப்புகள், உதயநிதிநற்பணி மன்றத்தின் சார்பில் கேக் வெட்டி, உணவு வழங்கிகொண்டாட்டம்;

Update: 2025-11-27 07:34 GMT
தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சரும்திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 49 வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு கிழக்கு மற்றும் மேற்கு நகர திமுக சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக உள்ள அனைவருக்கும் பால் மற்றும் ரொட்டி வழங்கப்பட்டது, திருச்செங்கோடு புதியபேருந்து நிலையத்தில் நகரதிமுக இளைஞரணி சார்பில்பேருந்தில் வந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதே போல் உதயநிதி நற்பணி மன்றத்தின் சார்பில் 11 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன் கிழக்கு நகர திமுக செயலாளர் துணை தலைவர் கார்த்திகேயன் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல்,உதயநிதி நற்பணி மன்ற தலைவர் கஜேந்திரன் மாணவரணி அமைப்பாளர் தியானேஸ்வரன் மகளிர் அணி அமைப்பாளர் கண்ணாம்பாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, புவனேஸ்வரி உலகநாதன், சண்முக வடிவு, செல்லம்மாள் தேவராஜன், திவ்யா வெங்கடேஸ்வரன்,சினேகா ஹரிகரன், அண்ணாமலை,நகர திமுக நிர்வாகிகள் மணிகண்டன், ரமேஷ்,முன்னாள் நகர துணை செயலாளர் முன்னாள்நகர் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன்ஆகியோர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News