தமிழக துணை முதலமைச்சர் பிறந்தநாளில் கரூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.

தமிழக துணை முதலமைச்சர் பிறந்தநாளில் கரூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.;

Update: 2025-11-27 10:01 GMT
தமிழக துணை முதலமைச்சர் பிறந்தநாளில் கரூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி திமுகவினர் கொண்டாட்டம். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூரில் மாநகர அமைப்பு சாரா அணியின் சார்பில் துணைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் கரூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் 200 பேருக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் 500 நபர்களுக்கு பிரியாணி வழங்கியும்,200 மரக்கன்றுகளையும், 500 லட்டுகளையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டு தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

Similar News