உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மறைந்த திமுக முன்னோடியின் சிதிலம் அடைந்த வீடு புதுப்பித்துக் கொடுத்த திமுகவினர்
தமிழக துணை முதல்வர் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இறந்து போன திமுகவின் மூத்த முன்னோடி கருப்பண்ணன் என்பவரது இல்லத்தை புதுப்பித்து குடும்பத்தினருக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சிவீட்டை மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்தி திறந்து வைத்தார்;
திருச்செங்கோடு நகரில் திமுகவின் மூத்த முன்னோடியாக திகழ்ந்த கருப்பண்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில் அவரது வீடு பழுதுபட்டு குடும்பத்தினர் சிரமம் அடைவதைக் கண்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் அந்த வீட்டை புனரமைத்து குடும்பத்தினருக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி புனரமைக்கப்பட்ட வீட்டை தமிழக துணை முதல்வர் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு இன்று வீடு திறப்பு விழா செய்யப்பட்டு குடும்பத்தினரும் ஒப்படைக்கப் பட்டது.நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்தி புதுப்பிக்கப்பட்ட வீட்டை திறந்து வைத்தார் நிகழ்ச்சியில்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு நாமக்கல் மேற்கு நகர திமுக செயலாளர் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன்,கிழக்கு நகர திமுக செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் திமுக பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கருப்பண்ணன் வீடு அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.