கரூர்- தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் வாயிலாக கொண்டாடிய எம்எல்ஏ சிவகாமசுந்தரி.
கரூர்- தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் வாயிலாக கொண்டாடிய எம்எல்ஏ சிவகாமசுந்தரி.;
கரூர்- தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் வாயிலாக கொண்டாடிய எம்எல்ஏ சிவகாமசுந்தரி. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் நேற்று கொண்டாடினர். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி இன்று சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்பிடமங்கலம் அருகே உள்ள ரெங்கபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பள்ளி மாணவ - மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் . தொடர்ந்து அப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் அன்னதானம் வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் உப்பிடமங்கலம் பேரூர் கழக செயலாளர் திவ்யா தங்கராஜ் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.