வெள்ளியணை- செல்லாண்டிபட்டி ஸ்ரீ ராகவேந்திரா மழலையர்

வெள்ளியணை- செல்லாண்டிபட்டி ஸ்ரீ ராகவேந்திரா மழலையர்;

Update: 2025-11-28 11:44 GMT
வெள்ளியணை- செல்லாண்டிபட்டி ஸ்ரீ ராகவேந்திரா மழலையர் & தொடக்கப்பள்ளியில் துணை முதலமைச்சர் பிறந்தநாள் விழா. வெள்ளியணை- அருகே உள்ள செல்லாண்டிபட்டி ஸ்ரீ ராகவேந்திரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்பள்ளியில் பயிலும் மாண்ணாக்கர்களுக்கு அன்னதானம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன்,புலியூர் பேரூராட்சி துணைத்தலைவர் அம்மையப்பன், புலியூர் பேரூராட்சி இளைஞரணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். தங்களுக்கு அன்னதானம் வழங்கிய எம்எல்ஏவுக்கும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மாணாக்கர்கள் நன்றி தெரிவித்தனர் .

Similar News